Sunday 2 February 2014

கேள்வி எண்: 001- அறிவியலின் தன்மை
கேள்வி மற்றும் பதிளை  உருவாக்கியவர்:


கேள்வியினை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்:


கேள்வியினை பதிவு செய்தவர்:



கேள்வி: அறிவியலின் ஒருதுறையினை சார்ந்த விஞ்ஞானிகளால் அவர்களது துறையினில் அவர்களால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மற்றொருதுறையினில் மிகப்பெரிய மாறுதல்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டா?


பதில்: நிச்சயம் உண்டு, அறிவியல் துறைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை, அவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளை அறிவது முக்கியம்.
       ஒரு துறையின் வளர்ச்சியிற்காக ஆய்வுகளை செய்து ஆராயும் அறிஞர்களால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சம்பந்தமே இல்லாத வேறு ஏதோ ஒருஅறிவியல் துறை வளரவும் வாய்ப்பு உண்டு உதாரணமாக ஒன்றினை இனி நாம் காண்போம்.


         


          இரண்டாவது உலக யுத்தத்தின் போது போர் கப்பல்கள் ; பல தாக்கப்பட்டு கடலின் தரைமட்டத்திற்கு மூழ்கடிக்கப்பட்டு அளிக்கப்பட்டன மனிதர்களோடுசேர்ந்து ஆயுதங்களும் பேருவாரியாக அழிக்கப்படடன இவ்வாறு கப்பல்களை இழப்பதை போரினால் ஈடுபடும் நாடுகள் விரும்பவில்லை மூழ்கியகப்பலை கண்டுபிடிக்க தத்தமது கப்பல் படையில் இருந்த ஆய்வாளர்களுக்கு கடுமையான ஆணைகளை பணிந்தன.

Friday 26 October 2012

அறிவியல் தமிழ் மன்றம் – புதிய கல்வி முறைமை அறிமுகம்



அறிவியல் தமிழ் மன்றம் – புதிய கல்வி முறைமை அறிமுகம்

உணர்வு பூர்வமாக செயல்பட நம்மவர்கள் தயங்குவது கிடையாது.

உணர்வு பூர்வமாக அணுகும்  பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுக வேண்டும், சரிதான்

ஆனால் – தமிழ் மாணவர்கள் தமிழை விட்டு அகன்று செல்கிறார்கள் எண்ணும் பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுகுவதால் மேலும் பாதிப்பு மட்டுமே ஏற்படும்.

பயன்தரும் வரைதான் மரியாதை – இது மனிதர்களுக்கும் பொருந்தும் – மொழிகளுக்கும் பொருந்தும்

பயன் தராத மனிதர்களை – மொழிகளை மறுக்க மறக்க மனித மூளை தயங்காது.

எதார்த்தம் – ஒரு கசப்பான பதார்த்தம் – இந்த நிலையை நேரிடையாக சந்திக்கும்.